அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதி அமைச்சர் அனில் ஜயந்த,
சமகால அரசாங்கத்தின் கீழ் 1.2 ட்ரில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதாக அமைப்பொன்று வெளியிட்டுள்ள தகவலானது வேண்டுமென்றே அல்லது அறியாமையால் வெளியிடப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு நாணயத்தை அச்சிட முடியாது. அதற்கு சட்டப்பூர்வ அனுமதிகள் இல்லை.
இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் கையிருப்பினால் நாணய விரிவாக்கம் நிகழ்ந்துள்ளது. அது அரசாங்கத்தின் நாணயத்தாள் அச்சிடல் அல்ல. சமூகத்தை முற்றிலும் தவறாக வழிநடத்தும் வகையில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
தற்போது நாட்டில் 1.6 ட்ரில்லியன் நாணய இருப்பு உள்ளதுடன், பரந்த பண விநியோகம் 15 ட்ரில்லியனை நெருங்கியுள்ளது.
எனவே, இந்த பரந்த பண விநியோகத்தின் வளர்ச்சியானது மத்திய வங்கியின் தலையீட்டால் ஏற்பட்ட ஒன்றாகும் என்றும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.