தேசத்தைக் கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்களின் இரண்டாம் சுற்று இந்த வியாழக்கிழமை Prince Rupert இல் அறிவிக்கப்படும் என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மாகாணங்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் பெரிய பொறிமுறைகள் எங்களிடம் உள்ளன, என்று Carney கூறினார். முக்கிய திட்ட அறிவிப்பு குறித்த காலக்கெடுவை உறுதிப்படுத்துவதற்கு முன்னர் New Brunswick திட்டங்கள் எதுவும் முதல் தவணை திட்டங்களில் சேர்க்கப்படவில்லை என்ற சில மாகாண அதிகாரிகளின் கவலைகள் குறித்து கேட்டபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களுக்கான ஒழுங்குமுறை ஒப்புதலை நெறிப்படுத்தவும் விரைவுபடுத்தவும், பரிசீலனையில் உள்ள திட்டங்களை மேலும் மேம்படுத்தவும், Trans Mountain Corporation இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இயக்குநர்கள் குழுவின் தலைவருமான Dawn Farrell தலைமையிலான Major Projects Office (MPO) August மாதம் தொடங்கப்பட்டது.
தேசிய நலன் சார்ந்த முக்கிய திட்டங்களை அங்கீகரிக்க அரசாங்கத்திற்கு புதிய அதிகாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு June மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட C-5 மசோதாவின் கீழ் Liberal களால் MPO நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத்திட்டம் ஓர் பிரதமராக Carney இடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் வரவுசெலவுத்திட்டமாகும். இது புதிய தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான மத்திய அரசின் திட்டங்களை கோடிட்டுக் காட்டியது, ஆனாலும் MPO மற்றும் அதனுடன் தொடர்புடைய சுதேச ஆலோசனை முயற்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதைத் தாண்டி எந்த புதிய குறிப்பிட்ட திட்ட நிதியையும் சேர்க்கவில்லை என்று விமர்சிக்கப்படுகின்றது.

