7.8 C
Scarborough

அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி!

Must read

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று. இங்கு நடை​பெற்ற மேயர் தேர்​தலில் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்​தானி போட்​டி​யிட்​டார்.

இவரது தாய் மீரா நாயர் இந்​தி​யா​வைச் சேர்ந்த சினிமா தயாரிப்​பாளர். தந்தை மகமூத் மம்​தானி உகாண்​டாவைச் சேர்ந்​தவர். ஜோரான் மம்​தானிக்கு 7 வயது இருக்​கும்​போதே அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் குடியேறி​விட்​டார். படிப்பை முடித்​ததும் அரசி​யலில் இறங்​கி​னார். கடந்த 2020-ம் ஆண்டு இவர் முதல் முறை​யாக நியூ​யார்க் சட்​டப்​பேர​வைக்கு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

தற்​போது நடை​பெற்ற நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் அவர் ஜனநாயக கட்சி சார்​பில் போட்​டி​யிட்​டார். இவரை எதிர்த்து அதிபர் டொனால்டு ட்ரம்​பின் குடியரசு கட்சி சார்​பில் கர்​டிஸ் ஸ்லி​வா, சுயேட்​சை​யாக முன்​னாள் நியூ​யார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ ஆகியோர் போட்​டி​யிட்​டனர். மம்​தானி தனது பிரச்​சா​ரத்​தின் போது இலவச பஸ் சேவை, குழந்​தைகள் பராமரிப்பு மையம், நியூ​யார்க் நகருக்கு சொந்​த​மான பலசரக்கு கடைகள், குறைந்த விலை மற்​றும் வாடகை​ வீடு​கள் உட்பட பல வாக்​குறு​தி​களை அளித்​தார்.

ஜோரான் மம்​தானி 50.4 சதவீத வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றுள்​ளார். நியூ​யார்க்​கில் மேய​ராக தேர்வு செய்​யப்பட்டுள்ள முதல் இந்​திய அமெரிக்க முஸ்​லிம் மம்​தானி என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இவருக்கு இந்​திய அமெரிக்​கர்​கள் அனை​வரும் தங்​கள்​ வாழ்த்​துகளை தெரிவித்​துள்​ளனர்​.

ஊழலுக்கு முடிவு கட்டுவேன்: நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோரான் மம்தானி நேற்று முன்தினம் இரவு உரையாற்றினார். இதில் அவர் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய ‘விதியுடன் ஒரு சந்திப்பு’ என்ற சுதந்திர தின உரையை நினைவு கூர்ந்தார். அப்போது மம்தானி பேசும்போது, “நியூயார்க்கின் புதிய தலைமுறையினருக்கு நன்றி.

நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம். உங்களுக்காக போராடுவோம். எதிர்காலம் நமது கையில் உள்ளது. ஒரு அரசியல் சாம்ராஜ்ஜியத்தையை நாம் தோற்கடித்துள்ளோம். டொனால்டு ட்ரம்ப் அவர்களே, உங்களை வளர்த்த நகரமே உங்களை தோற்கடித்துவிட்டது. ஊழல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவேன். இதுதான் உங்களைப்போன்ற கோடீஸ்வரர்கள் வரிஏய்ப்பு செய்ய அனுமதித்தது. மலிவான நகரம், புதுவித அரசியல், மாற்றம் ஆகியவற்றுக்கு வாக்களித்த நியூயார்க் மக்களுக்கு நன்றி” என்றார்.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article