17.5 C
Scarborough

அமெரிக்காவினால் வரிகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை!

Must read

அமெரிக்காவினால் பெரும்பாலான நாடுகள்மீது விதிக்கப்படும் பரஸ்பர வரிகளில் இருந்து கனடாவிற்கு விலக்களிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்கப்படுகின்ற போதும் சில கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரிகள் நடைமுறையில் உள்ளதுடன் அனைத்து வெளிநாட்டுத் தயாரிப்பு automobile களுக்கும் 25 சதவீத வரிகளும் நடைமுறைகக்கு வரவுள்ளது.

அமெரிக்காவின் வரிகளை பரஸ்பர வரி என விளக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எங்ளுக்கு விதிக்கும் வரிகளையே நாம் அவர்களுக்கு விதிக்கின்றோம் என்றார். மேலும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரிகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்ட ட்ரம்பின் அறிக்கையில் கனடா இடம்பெறவில்லை.

2025 ஏப்ரல் 02 அமெரிக்கத் தொழில்த்துறை மீண்டும் பிறந்த நாளாகவும், அமெரிக்காவின் விதி மீட்டெடுக்கப்பட்ட நாளாகவும், அமெரிக்காவை மீண்டும் செல்வந்தராக்கத் தொடங்கிய நாளாகவும் என்றென்றும் நினைவுகூரப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து கனேடிய இறக்குமதிகள் மீதான 25 சதவீத வரிகளுக்கும், கனேடிய எரிசக்தி மீதான 10 சதவீத வரிகளுக்கும் விதிக்கப்பட்ட இரண்டாவது மாத நீடிப்புக்காலம் புதன்கிழமை காலாவதியானது. இதனடிப்படையில் CUSMA ஒப்பந்தத்தில் உள்ளடங்காத அனைத்து பொருட்களும் வரிவிதிப்பிற்கு உட்படும்.

அமெரிக்கா கனேடியப் பொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் நீக்கும் வரை 30 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா விதித்துள்ள பழிவாங்கும் வரியும் தொடரும் எனவும் கனடா தனது எதிர் நடவடிக்கைகளை திட்டமிட்டு தொடரும் எனவும் கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ளது.

Automobile விடயத்தில் அமெரிக்காவினால் கனடாவிற்கு ஏதாவது வரி விலக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்பில் கனடாவின் மத்திய மற்றும் மாகாண அரசுகள் செயற்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனாலும் அமெரிக்காவின் Automobile வரி அவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அண்மைய வரிகள் தொடர்பில் உடனடியாக எதிர்வினையாற்றாத பிரதமர் மார்க் கார்னியின் பொறுமை அவரின் நிதானமான செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article