Stellantis மற்றும் General Motors ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் கனேடிய வர்த்தக செயல்பாடுகளைக் குறைத்த பின்னர், வரியின்றி எத்தனை வாகனங்களை இறக்குமதி செய்யலாம் என்பதை மத்திய அரசு வரையறை செய்கின்றது என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த அறிவிப்பு இறுதி செய்யப்படும் வரை பகிரங்கமாகப் பேச அதிகாரம் இல்லாத மத்தியரசின் அதிகாரிகள், பழிவாங்கும் வரிகளை எதிர்கொள்ளாமல் எத்தனை U.S.-assembled வாகனங்களை இறக்குமதி செய்யலாம் என்பதை கனடா கட்டுப்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
April மாதத்தில், அரசாங்கம் சில அமெரிக்கப் பொருட்களுக்கு பழிவாங்கும் வரிகளை விதித்தது, இருப்பினும் சில வாகன உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை கனடாவிற்குள் கொண்டு வருவதற்கு சில விலக்குகளையும் இது வழங்கியது. இது நிவாரண ஒதுக்கீடு என்று அழைக்கப்படுகிறது.
இந்த கட்டணமில்லா ஒதுக்கீட்டை அணுகுவது ஒவ்வொரு நிறுவனமும் கனேடிய தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டைப் பராமரிக்க வேண்டிய விதிமுறைகளுடன் தொடர்புடையதாக Ottawa கூறுகிறது. அதனடிப்படையில் குறித்த இரு நிறுவனங்களும் அண்மைய வாரங்களில் குறைப்புகளை அறிவித்துள்ளன.
Ottawa, General Motors இற்கான விதிவிலக்கு ஒதுக்கீட்டை 24 சதவீதம் குறைத்து வருவதாகவும், அதேநேரம் Stellantis நிறுவனத்திற்கு 50 சதவீதம் குறைத்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
General Motors இந்த வாரம் Ontario வின் Ingersoll இல் BrightDrop electric வான்களின் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் Stellantis நிறுவனம் Jeep Compass உற்பத்தியை Ontario வின் Brampton இல் இருந்து Illinois இற்கு மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது.

