அமெரிக்க இராணுவத்திலிருந்து மாற்று பாலின உறுப்பினர்களை நீக்குவது தொடர்பான அறிவிப்பை பெண்டகன் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, மாற்றுப்பாலினத்தவர்கள் இராணுவத்தில் இணைவதற்கோ அல்லது பணியாற்றவோ தடை விதிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மாற்று பாலினத்தவர்களுக்கு எதிரான பல தீர்மானங்கள் அடங்கிய உத்தரவுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இந்தநிலையில்,மாற்று பாலினத்தவர்களாக இருக்கும் துருப்பினர்களை 30 நாட்களுக்குள் அடையாளம் காண ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் 30 நாட்களுக்குள் அவர்களை இராணுவத்திலிருந்து விடுவிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் பெண்டகன் அறிவித்துள்ளது.