6.9 C
Scarborough

அணு ஆயுதங்களை அதிகரிக்க பிரான்ஸ் அதிபர் உத்தரவு: உலக நாடுகள் அதிர்ச்சி!

Must read

உலகளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரான்ஸ் நாட்டின் அணு ஆயுத இருப்பை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள ‘இல் லாங்கு’ கடற்படை தளத்தில் போர் தளபதிகள் முன்னிலையில் பேசிய மேக்ரான், “சுதந்திரமாக இருக்க வேண்டுமெனில், நாம் வலிமையானவர்களாகவும், மற்றவர்களால் அஞ்சப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

1992-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரான்சிடம் சுமார் 290 முதல் 300 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், புதிய உத்தரவின்படி இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக இனி அணு ஆயுதங்களின் துல்லியமான எண்ணிக்கை வெளியிடப்படாது என்றும் அவர் அறிவித்தார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜெர்மனி, போலந்து உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் போர் விமானங்களை வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article