அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் அகர், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றனர்.
கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய குறித்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு பெலிக்ஸ் அகர் (கனடா) மற்றும் செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா) ஆகியோர் முன்னேறினர்.
இதில் பெலிக்ஸ் அகர் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் கீஸ் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.