அமெரிக்க அதிபர் Donald Trump உடன் பேச்சுவார்த்தைக்காக பிரதமர் Mark Carney அடுத்த வாரம் Washington இற்கு பயணம் மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
நான் விரைவில் ஜனாதிபதியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறும் பிரதமர் Carney இருபபினும், இப்போது ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எனக்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்று கூறுகின்றார். “அமெரிக்கா திரும்பி வந்து வர்த்தகப் பக்கத்தில் விவாதங்களை நடத்த விரும்பும்போது, நாங்கள் அந்த விவாதங்களை நடத்துவோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த வாரம் Carney அமெரிக்க தலைநகருக்கு பயணம் மேற்கொண்டால், இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் வர்த்தகப் போருக்கு மத்தியில், April மாதம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இது அவர் மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாக இருக்கும். இப்பயணத்தின் சாத்தியம் குறித்த செய்தியை முதலில் Bloomberg வெளியிட்டது.
February இல், Trump கனேடிய பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதித்தார், அது இன்னும் தொடரும் வர்த்தகப் போரை தூண்டியது. புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்காக இவ்வருடத்தின் நடுப்பகுதி காலக்கெடுவை நோக்கி Carney யும் Trump உம் பணியாற்றி வருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், எதுவும் நிறைவேறவில்லை.
அதன் பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan வரிகளைப் பயன்படுத்துவதை விமர்சித்த Ontario அரசாங்கத்தின் விளம்பரத்தைக் குற்றம் சாட்டி, கடந்த மாதம் Trump திடீரென பேச்சுவார்த்தைகளையும் நிறுத்தினார்.
கனடா பொருட்களில் பெரும்பாலானவை Trump இன் ஆரம்ப வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தாலும், அவை எல்லைப் பாதுகாப்பு தொடர்பானவை என்று அவர் கூறினார். இரும்பு, அலுமினியம், செப்பு, Autos மற்றும் மரம் வெட்டுதல் உள்ளிட்ட கனேடிய தொழில்களைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்க துறை வரிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
கடந்த மாதம் பிரதமர் Washington இற்கு மேற்கொண்ட அண்மைய விஜயத்திற்குப் பின்னர், பிரதமரும் கனேடிய தூதுக்குழுவும் ஒரு ஒப்பந்தத்தை நோக்கி நம்பிக்கையான முன்னேற்றம் அடைந்து வருவதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்க்கது.

