அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனேடிய மாகாணமொன்று கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரிகள் விதித்ததற்குப் பதிலளிக்கும் வகையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசு அமெரிக்க நிறுவனங்களை தடை செய்துள்ளது.
மேலும், 100 மில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள ஸ்டார்லிங் (StarLink) ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
டிரம்ப் 25% வரிகளை கனடாவின் பெரும்பாலான இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கிறார்.
ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், “நமது பொருளாதாரத்தை அழிக்க நினைக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யமாட்டோம்” எனக் கடுமையாக கண்டித்தார்.
ஒன்ராறியோ அரசு 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்குவதை அமெரிக்க நிறுவனங்களுக்கு தடைசெய்துள்ளது.
2023 நவம்பரில் கையெழுத்திடப்பட்ட ஸ்டார்லிங் ஒப்பந்தத்தின் மூலம், 15,000 வீட்டுவீதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் விரைவான இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா மீது 106.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
மெக்சிகோ, அமெரிக்காவின் வரிகளை ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்க, 10,000 தேசிய பாதுகாப்புப் படைகளை வடக்கு எல்லையில் கடும் கண்காணிப்பிற்காக அனுப்பியுள்ளது.
இந்த வரி போர், அமெரிக்கா – கனடா உறவுகளுக்கு புதிய சிக்கல்களை உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.