தனது சமூகப் பணிகள் தொடர்ந்து வரும் காலங்களில் Sinnarajah Foundation ஊடாக தொடரும் என்று பிரபல வர்த்தகரும், சமூக ஆர்வலருமான சியான் சின்னராஜா தெரிவித்தார்.
ருஜ் பார்க் – 25ஆம் வட்டாரத்தில் 2025ஆம் ஆண்டு இடைத் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டிருந்த சியான் சின்னராஜா, பின்னடவைச் சந்தித்திருந்த போதிலும், அவரது தொண்டர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களை அழைத்து அவரது பிரசாரப் பணியகத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.
தேர்தலில் போட்டியிட்டதில் இருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததாகவும், தனக்கு வாக்களித்த மக்களுக்கும், வாக்கு சேகரிக்க தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய, இதற்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
அத்துடன் இனிவரும் காலத்தில் Sinnarajah Foundation அமைப்பின் மூலம் தனது சமூகப் பணி தொடரும் என்றும் தெரிவித்தார்.