13.9 C
Scarborough

Scarborough துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த தமிழரின் பெற்றோர் உருக்கமான பதிவு.

Must read

கடந்த வாரம் Scarborough Town Centre இல் வைத்து கொலை செய்யப்பட்ட 19 வயது சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனின் மரணத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கள் குறித்து தமது அனுதாபத்தை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள கொலை செய்யப்பட்ட Daniel Amalathas இன் தாயார், அவர்களும் இளைஞர்கள் என்பதால் என் இதயம் அவர்களுக்காக வருந்துகிறது என்றார். அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஆனால் கடவுள் எல்லாவற்றையும் அறிவார். கடவுளே எங்கள் நீதிபதி, அவர் தீர்ப்பைக் கொண்டு வருவார். நான் அவர்களிடம் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை என்று கூறினார்.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பெயரிட முடியாத 17 வயது ஆண் சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை Toronto பொலிஸார் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னரே பெற்றோர் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

Scarborough shopping இல் உள்ள ஓர் Shopping mall இன் கழிப்பறையில் இல் கண்டுபிடிக்கப்பட்ட Daniel இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் நகரத்தின் 27வது கொலைச்சம்பவம் இதுவாகும். Ontario தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு auto mechanical engineering  மாணவராக இருந்த Daniel பகுதிநேரமாக Costco இல் வேலை செய்து வந்தார்.

உள்நாட்டு யுத்தத்திலிருந்து விடுபடும் நோக்கில் 1993 இல் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த இக்குடும்பம், கனடா சிறந்த வாய்ப்புகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ள அதே வேளையில், தனது மகனின் மரணம் தன்னை வெகுவாக காயப்படுத்தியுள்ளது என்றும் Daniel இன் தந்தையார் கவலை வெளியிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article