சர்ச்சைகளில் சிக்கியிருந்த Quebec Liberal கட்சித் தலைவர் Pablo Rodriguez, புதன்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இவர் Quebec இன் மாகாணசபை அமர்வில் ஒரு நாள் கூட உறுப்பினராக அமரவில்லை. ஒரு மெய்நிகர் உட்கட்சி கூட்டத்தின் (Virtual caucus meeting) போது அவர் தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.
முன்னாள் Liberal நாடாளுமன்றத் தலைவர் Marwah Rizqy நீக்கப்பட்டதில் இருந்து தொடங்கிய தொடர்ச்சியான சர்ச்சைகளைத் தொடர்ந்து, இந்த முன்னாள் மத்திய அமைச்சரவை அமைச்சர் தனது கட்சியின் நம்பிக்கையை இழந்ததாக Le Devoir பத்திரிகை முதலில் செய்தி வெளியிட்டது.
December 10 அன்று, Quebec இன் ஊழல் எதிர்ப்புப் படையான UPAC, Quebec Liberal கட்சிக்கு எதிராக ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியது. செவ்வாயன்று, நிதி திரட்டும் நிகழ்வொன்றில் சுமார் 20 நன்கொடையாளர்களுக்கு அவர்கள் வழங்கிய தலா $500 பங்களிப்புத் தொகை சட்டவிரோதமாகத் திருப்பி வழங்கப்பட்டதாக Le Journal de Montréal செய்தி வெளியிட்டது. இது தேர்தல் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.
தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், உண்மை வெளிவர வேண்டும் என்றும் Rodriguez தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மற்றொருபுறம், Rizqy புதன்கிழமையன்று கூறுகையில், தனக்கு கட்சித் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அவர் தனது முகநூல் (Facebook) பக்கத்தில், “எனக்கு அத்தகைய எண்ணம் இருந்ததில்லை, இன்றும் இல்லை, வரும் வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ அது இருக்கப்போவதும் இல்லை என்பதை நான் மீண்டும் உறுதியாகக் கூற விரும்புகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் Dominique Anglade பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த June மாதம் நடைபெற்ற தேர்தலில் 52 சதவீத வாக்குகளைப் பெற்று Rodriguez தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 November மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில், Liberals கட்சி அதன் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து Anglade தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

