7.8 C
Scarborough

NDP தலைவர் பதவி -நிபந்தனைகளை பூர்த்தி செய்ய போட்டி

Must read

NDP யின் தலைமை பதவிக்கான மூன்று நிதி திரட்டும் காலக்கெடுக்களில் முதலாவது வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. இதில் சில வேட்பாளர்கள் போட்டியில் நீடிப்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ளனர்.

British Columbia வின் Campbell River இல் உள்ள நகரசபை உறுப்பினரான Tanille Johnston இன் பிரச்சார செய்தித் தொடர்பாளர், அவர் $25,000 செலுத்த முடியும் என்றும், இதன் மூலம் அவர் போட்டியில் நீடிக்கவும், இந்த மாத இறுதியில் Montreal இல் நடைபெறும் விவாத மேடையில் பங்குபற்றவும் முடியும் என்றும் கூறினார்.

Tanille உடைய பெயரை வாக்குச்சீட்டில் உள்வாங்குவதற்கு $100,000 என்ற இலக்கை அடைய எங்கள் தொழிலாள வர்க்க தளத்தை உதவுமாறு கேட்பது சிறிய சாதனையல்ல. ஆனால் உத்வேகம் அதிகரித்து வருகிறது, மேலும் நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் அடிமட்ட ஆதரவை வளர்த்து வருகிறோம், அத்துடன் நாளை எங்கள் முதல் கட்டண வரம்பை அடைவோம் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

Ontario வை சேர்ந்த இயற்கை விவசாயியான Tony McQuail, தனது தலைமைத்துவ பிரச்சாரத்திற்கு தேவையான நிதி இருப்பதாகவும், ஆனால் கையொப்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வேட்பாளர்களுக்கு கட்சி உறுப்பினர்களிடமிருந்து 500 கையொப்பங்களும்,  Atlantic, Quebec, Ontario, Prairies மற்றும் British Columbia ஆகிய ஐந்து பிராந்தியங்களிலிருந்து தலா 50 கையொப்பங்களும் தேவை.

இவர்களை விட Avi Lewis, Heather McPherson மற்றும் Rob Ashton ஆகியோரின் பிரச்சாரங்கள் அனைத்தும் தாங்கள் அண்மைய தலைமைதுவ போட்டிக்கான பணத்தைச் செலுத்திவிட்டதாகக் கூறுகின்றன.

NDP தலைமை வேட்பாளர்கள் November 27 அன்று Montreal இல் ஒரு பிரதான பிரெஞ்சு மொழி விவாதத்திற்காக சந்திக்க உள்ளனர்.

canadatamilnews

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article