19.3 C
Scarborough

NATO வின் ஐந்து சதவீத இலக்கை அடைய புதிய வழியைக் கண்டு பிடித்துள்ள கனடா!

Must read

NATO தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக தற்போது Netherlands இல் தங்கியிருக்கும் பிரதமர் Mark Carney ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, கனடா தனது முக்கியமான கனியவளங்களையும் அவற்றை சந்தைப்படுத்த தேவையான உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதன் மூலம் இன்னும் அதிக NATO செலவின இலக்கை அடையும் என்று கூறினார்.

NATO செலவின இலக்கை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து தலைவர்கள் விவாதித்து வரும் நிலையில், NATO வின் பொதுச் செயலாளர் Mark Rutte அதனை தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக இரட்டிப்பாக்க வேண்டுமென முன்மொழிந்துள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் Mark Carney பத்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக செலவினங்களை அதிகரிக்க தலைவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.

கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதம் என்பது ஆண்டுக்கு சுமார் 150 பில்லியன் டொலர்களாக இருக்குமென்று Carney கூறினார். கடந்த ஆண்டு கனடா பாதுகாப்புக்காக 41 பில்லியன் டொலர்களை செலவிட்டதாக NATO கூறியது. எதிர்காலத்தில் முக்கியமான கனியவளங்களின் இருப்புக்களை மேம்படுத்துவதன் மூலம் கனடா இலக்கை ஓரளவு அடையும் என்றும் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து சில திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.

NATO வின் 32 உறுப்பு நாடுகளில் இதுவரை எந்த உறுப்பு நாடும் ஐந்து சதவீதத்திற்கு அண்மித்த செலவை செய்யவில்லை அமெரிக்கா மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.38 சதவீதத்தை 2024 இல் செலவு செய்துள்ளது.

NATO தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு சதவீத இலக்கை 2014 இல் நிர்ணயித்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக 32 உறுப்பு நாடுகளும் குறித்த இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இரண்டு சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 2014 இல், மூன்று NATO உறுப்பு நாடுகள் மட்டுமே இலக்கை எட்டியிருந்தன. அமெரிக்கா U.K. மற்றும் Greece ஆகிய நாடுகளே அவையாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article