Ottawa ஐரோப்பாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கச் நினைப்பதால், இயற்கை வளத் திட்டங்களுக்கு கூட்டு பொது நிதியுதவி செய்வதை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான கனிமக் கூட்டு ஒப்பந்தத்தில் கனடா செவ்வாயன்று Germany உடன் கையெழுத்திட்டது.
China மற்றும் Russia உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், nickel மற்றும் cobalt போன்ற முக்கிய கனேடிய கனிமங்கள் நீண்ட காலமாக வளர்ச்சியடையாமல் போய்விட்டதாக பிரதமர் Mark Carney கூறினார். வளர்ந்து வரும் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கு முக்கியமான கனிமங்கள் மிகவும் அவசியமானவை என்றும் அவர் கூறினார்.
China மற்றும் Russia விலிருந்து விலகி செயல்படுவதால் Germany ஐரோப்பாவில் ஒரு தலைவராக மாறியுள்ளது என்று கூறிய Carney இனிவரும் காலங்களில் Germany உடன் இணைந்து கனடாவும் ஒரு பங்கை வகிக்க முடியும் என தெரிவித்ததுடன், அடுத்து வரும் தசாப்தத்தில் முக்கியமான கனிமங்களுக்கான தேவை நான்கு மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறினார்.
Ottawa துறைமுக உட்கட்டமைப்பில் புதிய முதலீடுகளை அடுத்த இரண்டு வாரங்களில் முறையாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் இதன்போது கூறினார், மேலும் ஆற்றல் மற்றும் கனிம பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவும் Montreal மற்றும் Churchill துறைமுக அபிவிருத்திகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பின் போது, புதிய சுரங்க கூட்டமைப்பை முன்னேற்றுவதற்காக இரு நாடுகளும் மூத்த அதிகாரிகளை சிறப்புத் தூதர்களாக நியமித்தன. அவர்களில் கனடாவின் முக்கிய நபரான இயற்கை வளங்கள் கனடாவின் நிலங்கள் மற்றும் கனிமங்கள் துறைக்கான மூத்த உதவி துணை அமைச்சர் Isabella Chan உம், Germany சார்பில் அதன் மூல கனிமக் கொள்கைக்கான துணை இயக்குநர் நாயகமான Matthias Koehler உம் நியமிக்கப்பட்டனர்.