19.6 C
Scarborough

G7 உச்சிமாநாடு இந்தியப் பிரதமருக்கான அழைப்பைத் திரும்பப் பெறுமாறு சீக்கிய குழுக்கள் கோரிக்கை!

Must read

அடுத்த வாரம் அல்பர்டாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பை இரத்து செய்யுமாறு கனடாவின் உலக சீக்கிய அமைப்பு மற்றும் கனடாவின் சீக்கிய கூட்டமைப்பு ஆகிய சீக்கிய குழுக்கள் பிரதமர் மார்க் கார்னியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவின் வெளிநாட்டு தலையீடு மற்றும் நாடுகடந்த ஒடுக்குமுறை குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறும் குறித்த குழுக்கள் இந்தியா, நடந்துகொண்டிருக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைத்து, கனடா விவகாரங்களில் தலையிடுவதையும் கனடாவில் உள்ள சீக்கியர்களை குறிவைப்பதையும் நிறுத்துவதாக உறுதியளிக்காவிட்டால் மோடியின் அழைப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளன.

மேலும், இந்தியாவுடன் எந்தவொரு புலனாய்வுப் பகிர்வையும் உடனடியாக நிறுத்துமாறு லிபரல் அரசாங்கத்திடம் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் RCMP ஆகியன, 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Surrey இல் கனேடிய சீக்கிய பிரிவினைவாத ஆர்வலர் ஹர்தீப் சிங் நஜார் என்பவரின் கொலையின் பின்னணியில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களை தொடர்புபடுத்தியிருந்தனர். இதனடிப்படையிலேயே இந்திய அரசாங்கத்திற்கும் கனேடிய சீக்கிய குழுக்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது.

குறித்த விடயம் தொடர்பாக பிரதமர் Carney கடந்த புதன்கிழமை நடத்திய சந்திப்பின் போது British Columbia வின் தற்போதைய Liberal நாடாளுமன்ற உறுப்பினரான Sukh Dhaliwal இந்த அழைப்பை மிகவும் மோசமான செயல் என வர்ணித்ததுடன் நூற்றுக்கணக்கான மக்கள் இதனை எதிர்ப்பதாகவும் கூறினார்.

இந்தியப்பிரதமரின் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு அருகிலும் ஏனைய போராட்டங்கள் உச்சி மாநாடு நடைபெறவிருக்கும் Banff மற்றும் Calgary பிரதேசங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீக்கிய குழுக்கள் அறிவித்துள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article