4 C
Scarborough

அமெரிக்கா வரும் கனேடியர்கள் புகைப்படம் எடுக்கப்படுவார்கள்!

Must read

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) புதிய விதிமுறையின்படி, அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் அனைத்து தனிநபர்களும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்போ அல்லது வெளியேறுவதற்கு முன்போ புகைப்படம் எடுக்கப்படுவார்கள். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.

​சில சந்தர்ப்பங்களில், அமெரிக்க சுங்க அதிகாரிகள் பயணிகளின் கைரேகைகளையும் பதிவு செய்ய முடியும். December 26 முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கைகள், கனடா நாட்டுப் பயணிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் உட்பட அமெரிக்க குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இது குறித்துக் கூறுகையில், 2004-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிற்குள் நுழையும் குறிப்பிட்ட பயணிகளிடமிருந்து உயிரியளவீட்டுத் தரவுகளை (biometric data) சேகரித்து வருவதாகவும், ஆனால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது இந்தத் தகவல்களைப் பதிவு செய்வதற்கு முறையான கட்டமைப்பு வசதிகள் அப்போது இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

October 27 அன்று வெளியிடப்பட்ட ஆவணத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியம் என்று வாதிட்டது. குறிப்பாக, “பயங்கரவாத அச்சுறுத்தல்கள், முறையான பயண ஆவணங்களை மோசடியாகப் பயன்படுத்துதல், அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அல்லது அனுமதி பெறாமல் அமெரிக்காவில் இருப்பவர்கள்” போன்ற சிக்கல்களைத் தீர்க்க இது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது.

சேகரிக்கப்படும் உயிரியளவீட்டுத் தரவுகள் (Biometric data) 75 ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படும் என்றும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் முழுமையாகச் செயற்படுத்துவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

canadatamilnews

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article