14.6 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

அக்ரமின் சாதனையை முறியடித்த பும்ரா

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டொஸ் வென்ற...

இலங்கை மற்றும் பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சமநிலையில் முடிந்தது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் எடுத்த 495 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை...

டோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டொஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல்...

இந்திய -இங்கிலாந்து டெஸ்ட் போட்டி – விற்று தீர்க்கப்பட்டன டிக்கட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங்...

கிரிக்கட் ரசிகர்கள் கொண்டாடும் பவுமா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததோடு, ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தையும் உடைத்தது தென் ஆப்பிரிக்கா அணி. தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா...

சம்பியனான ஜெர்மனியின் டாட்ஜானா மரியா

பல நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று 14 இடம்பெற்றது. இதில் டாட்ஜானா மரியா (ஜெர்மனி), அமண்டா...

சிறந்த டெஸ்ட் அணியை தெரிவு செய்த ஆஸி வீரர்

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தெரிவு செய்வது வழக்கம். அந்த வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள்...

கழக உலகக் கிண்ணத்தில் கிரேலிஷ், ஸ்டேர்லிங்க், லூயிஸ் இல்லை!

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் குழாமில் மத்தியகளவீரரான ஜக் கிரேலிஷ் இடம்பெறவில்லை. இதேவேளை சிற்றியின் குழாமில் பின்களவீரரான கைல் வோக்கரும் இடம்பெறவில்லை. இந்நிலையில்...

27 வருடங்களின் கிண்ணக் கனவினை நனவாக்கிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி!

இன்று (14) நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவினை 05 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்கா சுமார் 27 வருட இடைவெளியின் பின்னர் ஐ.சி.சி....

பிக் பேஷ் லீக்கில் முதல் தடவையாக ஒப்பந்தமாகிய பாபர் அசாம்!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற புகழ்பெற்ற T20 லீக் தொடரான பிக்; பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாட பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.   இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான வரைவிற்கு முன், ஸ்டீவன் ஸ்மித், சீன் அபாட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஆடுகின்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரராக பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.   இந்த நிலையில், இம்முறை பிக் பேஷ் லீக்கில் சிட்னி அணிக்காக விளையாடுவது தொடர்பில் பாபர் அசாம் கருத்து தெரிவிக்கையில், ‘உலகின் சிறந்த T20 லீக்குகளில் ஒன்றில் விளையாடவும், இத்தகைய வெற்றிகரமான மற்றும் மதிக்கப்படும் அணியின் ஒரு பகுதியாக இருப்பதும் எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும். சிட்னி அணியின் வெற்றிக்கு பங்களிப்பதையும், ரசிகர்களுடன் வலுவான தொடர்பை உருவாக்குவதையும், இந்த அனுபவத்தை பாகிஸ்தானில் உள்ள எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் நான் எதிர்நோக்குகிறேன்.’ என அவர் தெரிவித்தார்.   இதேவேளை, அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக் தொடரின் வீரர்களுக்கான வரைவில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களான ஷஹீன் அப்ரிடி, சதாப் கான், ஹாரிஸ் ரவூப் மற்றும் மொஹமட்  ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    30 வயதான பாபர்; அசாம், இதுவரை 320 T20I போட்டிகளில் விளையாடி 11300 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பெஷாவர் ஷல்மி அணியை வழிநடத்தினார். அந்த அணிக்காக 10 இன்னிங்ஸில் 288 ஓட்டங்களை எடுத்து, 128.57 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அந்த அணி;க்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறினார்.   இருப்பினும், பாபர் அசாம் மோசமான போர்ம் காரணமாக பாகிஸ்தான் T20I அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Latest news