நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தெரிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள்...
இன்று (14) நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவினை 05 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்கா சுமார் 27 வருட இடைவெளியின் பின்னர் ஐ.சி.சி....
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற புகழ்பெற்ற T20 லீக் தொடரான பிக்; பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாட பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான வரைவிற்கு முன், ஸ்டீவன் ஸ்மித், சீன் அபாட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஆடுகின்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரராக பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், இம்முறை பிக் பேஷ் லீக்கில் சிட்னி அணிக்காக விளையாடுவது தொடர்பில் பாபர் அசாம் கருத்து தெரிவிக்கையில், ‘உலகின் சிறந்த T20 லீக்குகளில் ஒன்றில் விளையாடவும், இத்தகைய வெற்றிகரமான மற்றும் மதிக்கப்படும் அணியின் ஒரு பகுதியாக இருப்பதும் எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும். சிட்னி அணியின் வெற்றிக்கு பங்களிப்பதையும், ரசிகர்களுடன் வலுவான தொடர்பை உருவாக்குவதையும், இந்த அனுபவத்தை பாகிஸ்தானில் உள்ள எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் நான் எதிர்நோக்குகிறேன்.’ என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக் தொடரின் வீரர்களுக்கான வரைவில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களான ஷஹீன் அப்ரிடி, சதாப் கான், ஹாரிஸ் ரவூப் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 வயதான பாபர்; அசாம், இதுவரை 320 T20I போட்டிகளில் விளையாடி 11300 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பெஷாவர் ஷல்மி அணியை வழிநடத்தினார். அந்த அணிக்காக 10 இன்னிங்ஸில் 288 ஓட்டங்களை எடுத்து, 128.57 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அந்த அணி;க்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறினார்.
இருப்பினும், பாபர் அசாம் மோசமான போர்ம் காரணமாக பாகிஸ்தான் T20I அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இம்மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் சய்த சேப்பாக் அணி 7...
கடந்த 2017-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான டென்னிஸ் ராக்கெட்...
ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் நகரில் ஆஸ்திரியா நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் மகளிருக்கான 10 கிலோ மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஷ்வாமி 47 நிமிடங்கள் 54 விநாடியில் இலக்கை அடைந்து முதலிடம்...
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதும் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு...