15.4 C
Scarborough

Bank of Canadaவின் அதிரடி தீர்மானம்!

Must read

அடுத்த ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டிய பணவியல் கொள்கை கட்டமைப்பின் போது Bank of Canada அதன் பணவீக்க இலக்கை மறுபரிசீலனை செய்யாது என்று ஆளுநர் Tiff Macklem செவ்வாயன்று தெரிவித்தார், தற்போதைய இலக்கு பணவீக்க எதிர்பார்ப்புகளை நிலைநிறுத்த உதவியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மத்திய வங்கியும் நிதி அமைச்சும் கூட்டாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இலக்கை மதிப்பாய்வு செய்து முறையாக ஒரு முடிவை அறிவிக்கின்றன, இதனடிப்படையில் அடுத்த மதிப்பாய்வு 2026 இல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Bank of Canada வின் நோக்கம் பணவீக்கத்தை 2 சதவீதமாக பேணுவதாகும். அத்துடன் அடுத்த ஆண்டு மதிப்பாய்வுக்கு முன்னர் வங்கி பல கேள்விகளைக் கேட்கும் அதே வேளையில், 2 சதவீத இலக்கு பரிசீலிக்கப்படாது என்று Macklem கூறினார். பணவியல் கொள்கை கட்டமைப்பு புதுப்பிக்கப்படும்போது 2 சதவீத இலக்கு மாறாமல் இருக்கும் என்று ஆளுநர் கூறியது இதுவே முதல் முறை ஆகும்.

இருப்பினும், மதிப்பாய்வுக்கு முன்னதாக, குறிப்பாக அமெரிக்க வரிகளின் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக கனேடிய பொருளாதாரம் அதன் விநியோகச் சங்கிலியை மறுசீரமைத்து வரும் வேளையில் விநியோக அதிர்ச்சிகளுக்கு மத்திய வங்கி எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து BoC ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

விநியோகத்தை கட்டுப்படுத்தும் எதிர்சக்திகள் இனிவரும் காலங்களில் பணவீக்கத்தில் மேலும் மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அத்துடன், அடிக்கடி ஏற்படும் விநியோக அதிர்ச்சிகள் பணவீக்கத்தில் அதிக மாறுபாட்டையும் குறிக்கலாம், என ஆளுநர் கூறினார். நிச்சயமற்ற தன்மையின் தாக்கத்தை மத்திய வங்கியால் ஈடுசெய்ய முடியாது என்றாலும், அடியைத் தாங்கும் வகையில் முடிவெடுப்பதை மாற்றியமைக்க முடியும் என்றும் Macklem மேலும் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article