மே14 ஆந் திகதி தொடக்கம் 16 ஆந் திகதி வரை ஒட்டாவாவின் National Arts Centre இல் கனேடிய வர்த்தக சபை [Canadian Chamber of Commerce] இந்த ஆண்டுக்கான G7 நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்களின் வருடாந்த B7 உச்சி மாநாட்டை நடத்துகிறது. இதில் முதல்முறையாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா உத்தியோகபூர்வமாக கலந்துகொள்ளவுள்ளார்.
B7 உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பீட் ஹோக்ஸ்ட்ரா, இம்மாதம் 16 அன்று உரையாற்றுவார் என்று கூறப்படுகின்றது.
ஏப்ரல் 15 ஆந் திகதி வொசிங்டன் இல் கனடாவுக்கான தூதராக நியமனம் பெற்ற பீட் ஹோக்ஸ்ட்ரா, ஏப்ரல் 29 ஆந் திகதி ஆளுநர் நாயகம் மேரி சைமனிடமிருந்து தனது உத்தியோகபூர்வ நற்சான்றிதழையும் பெற்றார். இவர் முன்னைய ட்ரம்ப் நிர்வாகத்தின் போது நெதர்லதாந்து இற்கான அமெரிக்க தூதராக பணியாற்றியதுடன் 2024 அமெரிக்கத் தேர்தலின் போது Michigan Republican Party தலைவராகவும் செயற்பட்டார்.
செவ்வாயன்று ட்ரம்ப் – கார்னி ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதும் பீட் ஹோக்ஸ்ட்ரா கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.