மேஷம்
வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் வங்கி கணக்கு உயரும். வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. சேமிப்பில் கவனம்...
இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க ரனாஞ்சக கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
இன்று...
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான IRON DOME ஐ ஊடுருவி ஈரான் ஏவுகணைகள் டெல் அவிவில் கட்டிடங்களை சேதப்படுத்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல்...
இன்று (14) நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவினை 05 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்கா சுமார் 27 வருட இடைவெளியின் பின்னர் ஐ.சி.சி....
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற புகழ்பெற்ற T20 லீக் தொடரான பிக்; பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாட பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான வரைவிற்கு முன், ஸ்டீவன் ஸ்மித், சீன் அபாட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஆடுகின்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரராக பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், இம்முறை பிக் பேஷ் லீக்கில் சிட்னி அணிக்காக விளையாடுவது தொடர்பில் பாபர் அசாம் கருத்து தெரிவிக்கையில், ‘உலகின் சிறந்த T20 லீக்குகளில் ஒன்றில் விளையாடவும், இத்தகைய வெற்றிகரமான மற்றும் மதிக்கப்படும் அணியின் ஒரு பகுதியாக இருப்பதும் எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும். சிட்னி அணியின் வெற்றிக்கு பங்களிப்பதையும், ரசிகர்களுடன் வலுவான தொடர்பை உருவாக்குவதையும், இந்த அனுபவத்தை பாகிஸ்தானில் உள்ள எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் நான் எதிர்நோக்குகிறேன்.’ என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக் தொடரின் வீரர்களுக்கான வரைவில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களான ஷஹீன் அப்ரிடி, சதாப் கான், ஹாரிஸ் ரவூப் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 வயதான பாபர்; அசாம், இதுவரை 320 T20I போட்டிகளில் விளையாடி 11300 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பெஷாவர் ஷல்மி அணியை வழிநடத்தினார். அந்த அணிக்காக 10 இன்னிங்ஸில் 288 ஓட்டங்களை எடுத்து, 128.57 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அந்த அணி;க்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறினார்.
இருப்பினும், பாபர் அசாம் மோசமான போர்ம் காரணமாக பாகிஸ்தான் T20I அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இம்மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993-ல் வெளியான படம், ‘ஜுராசிக் பார்க்’. இந்தப் படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. பிறகு...
தமிழில் ‘முந்தானை முடிச்சு’ மூலம் நடிகையாக அறிமுகமான ஊர்வசி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்துக் கடந்த...
‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால், படத்தின் வெளியீடும் தள்ளிப்போகும் என தெரிகிறது. ‘ஹிட் 3’ படத்துக்குப் பிறகு நானி நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘தி பாரடைஸ்’. இதனை ‘தசரா’ இயக்குநர்...