கனடாவிலிருந்து Alberta மாகாணத்தைப் பிரிப்பது குறித்து முன்மொழியப்பட்ட வாக்கெடுப்பு கேள்விக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக Elections Alberta தெரிவித்துள்ளது. அதாவது Alberta மாகாணம் கனடாவின் ஒரு பகுதியாக இருப்பதை விட்டு ஒரு சுதந்திர தனிநாடாக மாற வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என்பதே கேள்வியாகும்.
குறித்த மனுவிற்கான நிதி அதிகாரியை நியமிப்பதற்காக ஆதரவாளர் Alberta Prosperity Project இனை ஆரம்பிப்பதற்கு January தொடக்கம் வரை அவகாசம் உள்ளது என்றும், அதன் பின்னர் கையொப்பம் சேகரிப்பதை ஆரம்பிக்கலாம் என்றும் Elections Alberta மேலும் கூறுகிறது.
இந்தக் குழுவினர் நான்கு மாதங்களில் சுமார் 178,000 கையெழுத்துக்களைச் சேகரித்தால், இந்தக் கேள்வி பொதுவாக்கெடுப்பு மூலம் Alberta மக்களிடம் முன்வைக்கப்படும்.
இந்தக் கேள்வி, முன்னதாக இதே குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டதைப் போன்றதுதான், எனினும், அது நீதிமன்ற ஆய்விற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மாகாண அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் தனது பொதுவாக்கெடுப்பு விதிகளை மாற்றியுள்ளது.
சுதந்திரத்தை நாடுபவர்கள் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக நம்பினால், அதை நிரூபிக்க இதுவே அவர்களுக்கு வாய்ப்பு என்று பிரிவதை விரும்புவோர் கருதுகின்றனர். அத்துடன் Alberta மக்கள் விரைவில் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் உற்சாகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

