11.6 C
Scarborough

ஹோர்முஸ் நீரிணையின் புதிய வரைப்படத்தை வெளியிட்டது ஈரான்!

Must read

ஹோர்முஸ் நீரிணையில் தனது கடற்படையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் குறிக்கும் புதிய வரைபடத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரைபடத்தில் எல்லைகள், மேற்கில், ஈரானின் கெஷ்ம் தீவின் மேற்கு முனைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல்-குவைன் அமீரகத்திற்கும் இடையிலான ஒரு கோட்டுடன் இப்பகுதி ஆரம்பமாகிறது.

அதேபோல், கிழக்கில், ஈரானின் மொபாரக் மலைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா அமீரகத்திற்கும் இடையிலான ஒரு கோட்டில் இப்பகுதி நிறைவடைகிறது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள புதிய வரைபடத்தின் அடிப்படையில், ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article