10.6 C
Scarborough

ரஷ்யா விரைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

Must read

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் இருந்து நேரடியாக ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மொஸ்கோ சென்றடையும் அராக்சி, திங்கட்கிழமை (27) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஈரானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் – ரஷ்யா இடையிலான இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

அராக்சி கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார். இடையில் ஓமானுக்கும் சென்று வந்த அவர், தற்போது ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கும் ஈரானியத் தரப்புக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், தனது பிரதிநிதிகள் நீண்டதூரம் பயணம் செய்வது “நேர விரயம்” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை அந்த திட்டத்தை இரத்து செய்தார். “ஈரானியர்கள் எப்போது வேண்டுமானாலும் எம்மைத் தொலைபேசி மூலம் அழைக்கலாம்” என்று ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, நேரடிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான ஈரானின் போர் தற்போது ஒரு தற்காலிகப் போர்நிறுத்த நிலையில் உள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ரஷ்யாவின் ஆதரவை ஈரான் நாடியுள்ளதாகக் கருதப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article