13.2 C
Scarborough

கனடியர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

Must read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள 2,000-க்கும் மேற்பட்ட கனடியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற கனடிய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் Anita Anand தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் விமான சேவைகள் முடங்கியுள்ளன.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) சிக்கியுள்ள 1,170-க்கும் மேற்பட்ட கனடியர்களுக்காக சிறப்பு பட்டய விமானங்களை (Charter Flights) இயக்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனிடையே, Dubai நகரில் தங்கியுள்ள கனடியர்கள் தங்களது விமானங்கள் பலமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், போதிய தகவல்கள் இன்றித் தவிப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், லெபனான் (Lebanon), குவைத் மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய பகுதிகளில் உள்ள கனடியர்கள் தரைவழியாக அண்டை நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஈரானில் தூதரக உறவுகள் இல்லாததால் அங்குள்ள கனடியர்களுக்குக் குறைந்த அளவிலான உதவிகளே வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் Anita தெரிவித்துள்ளார்.

அதன்படி, அங்கிருப்பவர்கள் துருக்கி அல்லது ஆர்மீனியா எல்லைகளுக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமை மோசமடைந்து வருவதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article