ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இதனால், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரானை விட்டு உடனே வெளியேறும்படி இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு இன்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரானில் உள்ள மாணவர்கள், புனித யாத்திரை சென்றவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் உள்ளிட்ட இந்தியர்கள், வர்த்தக விமானங்கள் உள்பட கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி வெளியேறும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

