6.3 C
Scarborough

Maduro வின் நீக்கத்திற்குப் பின்னரும் கனடாவின் எண்ணெய் சந்தையில் போட்டித்தன்மையுடன் விளங்கும்.

Must read

Alberta மாகாண முதல்வர் Danielle Smith முக்கிய திட்டங்களுக்கான ஒப்புதல் செயல்முறையை Ottawa மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

விண்ணப்பங்களுக்கு ஆறு மாதங்களுக்குள் பச்சைக்கொடி காட்டப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
​கடந்த ஆண்டு நிறுவப்பட்ட பிரதமர் Mark Carney யின் முக்கிய திட்டங்களுக்கான அலுவலகம், தற்போது இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்குமுறை ஆய்வுகளை முடிக்க இலக்கு வைத்துள்ளது.

​வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட Carney க்கு எழுதிய கடிதத்தில் Smith, சமீபத்தில் Venezuela அதிபர் Nicolas Maduro அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதையும், அந்த தென் அமெரிக்க நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்க அதிபர் Donald Trump கொண்டுள்ள திட்டத்தையும் கருத்தில் கொள்ளும்போது, இரண்டு ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை Carney யுடன் சந்திப்பை நடத்தியதாகத் தெரிவித்த முதல்வர் Smith, Maduro வின் கைது நடவடிக்கை Alberta வின் புதிய குழாய்த்திட்டங்களின் அவசியத்தை உறுதிப்படுத்துவதாக முன்னரே குறிப்பிட்டிருந்தார். இதில் அவரது அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு முன்மொழியப்படும் மேற்கு கடற்கரைக்கான குழாய்த்திட்டமும் அடங்கும்.

​June மாதத்திற்குள் இத்தகைய குழாய்த்திட்டத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதற்கு இலையுதிர் காலத்திற்குப் பிந்தாது ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் Smith இன் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

கனடா எண்ணெய் உற்பத்தி ஆபத்து குறைந்தது என்பதுடன் செலவும் குறைந்தது என்பதால், Maduro வின் நீக்கத்திற்குப் பின்னரும் கனடாவின் எண்ணெய் சந்தையில் போட்டித்தன்மையுடன் விளங்கும் என்று Carney இந்த வார தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவாக இருந்தாலும், உலகளாவிய பிரச்சினைகளை தாங்கக்கூடிய, சுதந்திரமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒன்றாக நமது பொருளாதாரத்தையும் எரிசக்தித் துறையையும் மாற்றுவதற்கு எங்கள் அரசாங்கம் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

canadatamilnews

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article