ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது தூதரகத்தின் மீது ஏறி தேசியக் கொடியைக் கிழித்தெறிந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வன்முறையில் ஈடுபட்ட இருவர் லண்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
ஈரானில் பொருளாதார நெருக்கடியால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 13-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீதான இந்த ஒடுக்குமுறையை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு ஈரான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

