0.9 C
Scarborough

வரிவிதிப்பால் பாதிக்கப்படும் கனேடிய மரத்தளபாட உற்பத்தியாளர்கள்

Must read

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, தளபாடங்கள், அலுமாரிகள் மீதான வரி அதிகரிப்பை ஒத்திவைத்துள்ளதை வரவேற்பதாக Canadian Kitchen Cabinet Association தெரிவித்துள்ளது.

எனினும், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரிகளால் இந்தத் தொழில் துறை இன்னும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக அந்தச் சங்கம் கூறியுள்ளது.
​October மாதம் இந்தத் துறையின் மீது Trump 25 சதவீத வரிகளை விதித்தார்.

இந்நிலையில், January 1 முதல் அமுலுக்கு வரவிருந்த மெத்தை தளபாடங்களுக்கான 30 சதவீத வரி உயர்வையும், தளபாடங்கள் மற்றும் அலுமாரிகள் மீதான 50 சதவீத வரி உயர்வையும் அவர் தற்போது நிறுத்தி வைத்துள்ளார். 50 சதவீத வரி உயர்வு தவிர்க்கப்பட்டது ஒரு நிம்மதிதான். இருப்பினும் எங்களது தொழில் துறை ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியின் தாக்கத்திலிருந்தே இன்னும் மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது,” என்று அந்தச் சங்கத்தின் துணைத் தலைவர் Luke Elias தெரிவித்துள்ளார்.

CUSMA மீளாய்வு நெருங்கி வரும் வேளையில், இரும்பு மற்றும் வாகன உற்பத்தி போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அளிக்கப்படும் கவனத்தில், அலுமாரிகள் மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றின் தொழில்துறை புறக்கணிக்கப்படாமல் இருப்பது மிக அவசியம் என்று Elias கூறினார். ​இந்த வரி விதிப்புகளால் சுமார் 3,500 நிறுவனங்களும், அவற்றில் பணிபுரியும் 25,000-க்கும் மேற்பட்ட கனேடியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article