0.9 C
Scarborough

பிரதமர் கார்னி பெரிஸ் விஜயம்!

Must read

Ukraine இல் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், Ukraine இன் நட்பு நாடுகளைச் சந்திப்பதற்காக பிரதமர் Mark Carney அடுத்த வாரம் France செல்லவுள்ளார்.

​திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் Carney, Paris இல் இருப்பார் என்றும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக ஆர்வமுள்ள நாடுகளின் கூட்டணியை அவர் சந்திப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

​இது குறித்து Carney வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், Ukraine அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கோரி வரும் நிலையில், Ukraine ஐ பலப்படுத்துவதிலும், Russia வின் எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுப்பதிலுமே தனது கவனம் இருப்பதாகக் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Ukraine இன் மறுசீரமைப்புக்காக அதிக பங்களிப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக கனடா திகழ்கிறது. அந்தவகையில், கனடாவின் மொத்தப் பங்களிப்பு இதுவரை $23.5 பில்லியன் என கனடா அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்தத் தொகையில் $12 பில்லியன் நேரடி நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா இதுவரை நிதி ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இறையாண்மை கொண்ட Ukraine ஐ ஆதரிப்பதில் கனடா தீவிரமாக உள்ளது என்பதை நிரூபிக்க, எதிர்காலத்தில் ஒரு இராணுவ ரீதியான பங்களிப்பையும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article