பொலிஸ் துறையை முழுமையாக அரசியல் மயப்படுத்தும் முயற்சியில் தற்போதைய பொலிஸ்மா அதிபர் ஈடுபட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி.குற்றஞ்சாட்டியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
“ பொலிஸாரைக் கண்டு எமது தரப்பினர் ஓடி ஒளியமாட்டார்கள். உரிய வகையில் அறிவித்தல் வந்தால், பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் வழங்குவோம். அதன்பின்னர் சட்டத்தை அமுல்படுத்தலாம். இதனைவிடுத்து மக்களின் பணத்தை வீண்விரயம் செய்து, குழுக்களை அனுப்பி எதற்காக தேடுதல் நடத்த முற்பட வேண்டும்?எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் பொலிஸை அரசியல் மயப்படுத்துவதற்கு பொலிஸ்மா அதிபர் முற்படுகின்றார். இதனால் பொலிஸ்துறைக்குள்ள நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படக்கூடும்.” – என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

