தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உள்ளாட்சிசபைத் தேர்தலில் வெல்லும்போது தேசிய மக்கள் சக்தி வலுவாக இருந்தது. அதனால்தான் உள்ளாட்சிசபைகளில் வரவு- செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிரணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.
எனினும், இந்த அரசாங்கம் ஓடாது, நிச்சயம் விழும் என எதிரணி உறுப்பினர்கள் நம்புகின்றனர்.
ஓராண்டு கடந்தும் உள்ளாட்சிசபைகள் ஊடாக எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால்தான் எதிரணி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கின்றனர்.
மக்கள் மத்தியில் அரசாங்கம் நம்பிக்கை இழந்துவருகின்றது.
எனவே, மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடந்தாது. ஏனெனில் ஒரு சபையைக்கூட வெல்ல முடியாத நிலையே உள்ளது.” – எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

