Ukraine மீதான Russia வின் சுமார் நான்கு ஆண்டு கால ஆக்கிரமிப்பு தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், Ukraine இற்கு கனடாவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அதிபர் Volodymyr Zelenskyy உடன் பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.
இந்த பேச்சுவார்த்தைகள் முழுவதும் Ukraine இற்கான கனடாவின் அர்ப்பணிப்பை Carney உறுதிப்படுத்தினார், மேலும் Russia பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு அதன் மீது தொடர்ந்து அழுத்தத்தை பேண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் தரப்பில், பாதுகாப்பு மற்றும் உண்மையான மீட்சியை உறுதி செய்வதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என்பதை கனடா தெளிவாக அங்கீகரித்ததற்காக Zelenskyy நன்றி தெரிவித்தார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022 முதல் Ukraine இற்கு 22 பில்லியன் டொலர் நிதியுதவியை கனடா வழங்கியுள்ளது. நேரடி உதவி தவிர, Ukraine இன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதில் உடந்தையாக இருந்த 3,300-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது கனடா தடைகளை விதித்துள்ளது.
Zelenskyy யின் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக அவர் NATO பொதுச்செயலாளர் Mark Rutte மற்றும் Germany, Finland, Estonia, Denmark ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் உரையாடினார். Russia பகுதியளவு மட்டுமே ஆக்கிரமித்துள்ள Donbas பிராந்தியத்திலிருந்து தாமும் Russia அதிபர் Vladimir Putin உம் படைகளைத் திரும்பப் பெற முடியும் என்றும், அங்கு இராணுவமற்ற, சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட ஒரு மண்டலத்தை உருவாக்க முடியும் என்றும் Zelenskyy கூறியுள்ளார்.
பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க அதிபர் Donald Trump ஐ வரும் ஞாயிற்றுக்கிழமை Florida வில் சந்திக்க உள்ளதாக Ukraine அதிபர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். முன்னதாக, 1994 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, Russia அமெரிக்கா மற்றும் UK ஆகிய நாடுகளுடனான கூட்டு பாதுகாப்பு உத்தரவாதங்களுக்குப் பதிலாக, Ukraine தனது அணுஆயுத ஏவுகணைகளை ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

