2.8 C
Scarborough

அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு

Must read

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் ஆகியோருடன் ஜெலன்ஸ்கி பேச்சு நடத்தினார்.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தினார். இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.

போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்சத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான திட்டங்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார். சில பிராந்திய பிரச்னைகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது: அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் உடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. அவர்களிடம் நிலையான அமைதிக்கான நல்ல யோசனைகள் உள்ளன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு சமாதானம் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இரு நாடுகளும் உணர்திறன் மிக்க பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

அதிபர் டிரம்பின் தூதர்களுடன் இன்று நாம் விவாதித்ததை பொறுத்தவரை வெற்றி பெறுவது முக்கியம். சில ஆவணங்கள், எனக்குத் தெரிந்தபடி, கிட்டத்தட்ட தயாராக உள்ளன, மேலும் சில ஆவணங்கள் முழுமையாகத் தயாராக உள்ளன.

முக்கியமான விஷயங்களில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. ஆனால் அமெரிக்க குழுவுடன் சேர்ந்து, இதையெல்லாம் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். வரவிருக்கும் வாரங்களும் தீவிரமாக இருக்கலாம். இவ்வாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article