2.8 C
Scarborough

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

Must read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது.

டி.ராஜேந்தர், கனிகா மற்றும் ஆலியா மான்ஸா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை, மணிமேகலை தொகுத்து வழங்கினார். கூமாபட்டி தங்கபாண்டி, ராவணன், சுரேஷ், விக்னேஷ், தமிழரசன் என பல யூடியூப் பிரபலங்கள் இதில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கடந்த ஞாயிறன்று பரபரப்பாக நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் தங்க பாண்டி டைட்டிலை வென்றார். ராவண ராம் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தங்க பாண்டிக்கு ஜோடியாக சாந்தினி, ராவணன் ராமுக்கு ஜோடியாக ஆஷா கவுடா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article