கனடா தனது 2030-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவது கடினம் எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
“இங்கு அதிகப்படியான சட்டதிட்டங்கள் உள்ளபோதும் போதிய செயல்பாடுகள் இல்லை” என்று அவர் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில், கனடாவின் தற்போதைய பருவநிலை மாற்றக் கொள்கைகளில், ஏற்படவுள்ள மாற்றங்களை அவர் அறிவித்துள்ளார்.
கார்னி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, நுகர்வோர் மீதான கார்பன் வரியை ரத்து செய்தார்.
இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
எனினும், சாமானிய மக்கள் மீது வரி விதிப்பதற்குப் பதிலாக, பெரிய தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகைக்கு அதிக வரி விதிக்கும் (Industrial Carbon Pricing) புதிய முறையை அவர் அமல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

