கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கடுமையாக குறைந்திருந்த ‘பிறப்பு சுற்றுலா’ (Birth Tourism) விகிதங்கள், தற்போது கனடாவில் மீண்டும் உயர்ந்து வருவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் படி, கனடிய மருத்துவமனைகளில் குடியுரிமை இல்லாதவர்களால் (non-residents) நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களும் அடங்குவர். இந்த வகை பிறப்புகள் 2024-இல், தொற்று முன் இருந்த நிலைக்கு மீண்டும் வந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
தற்காலிக குடியிருப்பாளர்கள் அல்லது சுற்றுலா விசாவில் வரும் நபர்கள் தாங்களே மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டு பெறும் பிரசவங்களை“non-resident self-pay” என்ற சொல் குறிக்கிறது.
குடியுரிமை இல்லாத அல்லது நிரந்தர குடியிருப்பு இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள், கனடாவின் மொத்த பிறப்புகளில் மிகவும் குறைந்த பங்கையே வகிக்கின்றன.
2010 முதல் இவ்வகை பிறப்புகள் மொத்தத்தின் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் குடிவரவு விமர்சகரான மிச்சல் ராம்பெல் கார்னர் இந்த முயற்சியை மேற்கொண்டார்.
ஆனால் அந்த திருத்தம் லிபரல் மற்றும் பிளாக் கியூபெக்குவா எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் பிறப்புரிமை குடியுரிமை தொடர்ந்து அமலில் உள்ளது.

