8.5 C
Scarborough

பில் கிளின்டன், ட்ரம்ப் உள்ளிட்டோர் தொடர்பு அம்பலம்!

Must read

அமெரிக்​கா​வில் சர்ச்​சைக்​குரிய எப்​ஸ்​டீன் ஆவணங்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதில், பில் கிளின்​டன், ட்ரம்ப் உள்​ளிட்​டோரின் தொடர்பு அம்​பல​மாகி உள்​ளது.

அமெரிக்​காவைச் சேர்ந்​தவரும் நிதி ஆலோ​சகரு​மான ஜெப்ரி எப்​ஸ்​டீன் என்ற கோடீஸ்​வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடு​படுத்​தி​ய​தாகக் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பாக ஏராள​மான ஆவணங்​கள் திரட்​டப்​பட்​டு, வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த அவர் 2019-ல் தற்​கொலை செய்து கொண்​டார்.

இந்​நிலை​யில், சமீபத்​தில் கொண்​டு​வரப்​பட்ட வெளிப்​படைத்​தன்மை சட்​டத்​தின் கீழ் ஜெப்ரி எப்​ஸ்​டீன் வழக்​கின் விசா​ரணை ஆவணங்​களை, அந்​நாட்டு நீதித் துறை கடந்த 19-ம் தேதி முதல் வெளி​யிடத் தொடங்​கியது. இதையடுத்​து, கடந்த சில நாட்​களாக ஆயிரக்​கணக்​கான புகைப்​படங்​கள், மின்​னஞ்​சல்​கள் மற்​றும் விசா​ரணை அறிக்​கைகள் பொது​வெளி​யில் வெளி​யிடப்​பட்டு வரு​கின்​றன.

நீண்ட கால​மாக எதிர்​பார்க்​கப்​பட்ட இந்த ஆவணங்​கள், எப்​ஸ்​டீனுக்​கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்​ளிட்ட தொழில​திபர்​கள், பிரபலங்​கள், கல்​வி​யாளர்​கள் மற்​றும் அரசி​யல்​வா​தி​களுக்​கும் இடையி​லான தொடர்​பு​களை வெளிச்​சத்​திற்​குக் கொண்டு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. வெளி​யிடப்​பட்ட இந்த ஆவணத் தொகுப்​பில், 254 மசாஜ் செய்​பவர்​களின் பெயர்​கள் அடங்​கிய 7 பக்​கங்​கள் முற்​றி​லும் கருப்பு மையால் மறைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், முன்​னாள் அதிபர் பில் கிளின்​டன் இளமை​யாக இருந்​த​போது ஒரு ‘ஹாட் டப்​பில்’ சாய்ந்து அமர்ந்​திருப்​ப​தைக் காட்​டு​கிறது. அந்​தப் படத்​தின் ஒரு பகுதி மறைக்​கப்​பட்​டுள்​ளது. மற்​றொரு புகைப்​படம், கிளின்​டன் ஒரு கருப்பு நிற முடி கொண்ட பெண்​ணுடன் நீந்​து​வதைக் காட்​டு​கிறது. அந்​தப் பெண் எப்​ஸ்​டீனின் கூட்​டாளி​யான கிஸ்​லேன் மேக்​ஸ்​வெல் எனத் தெரி​கிறது.

மேலும், இந்த ஆவணங்​களில் கண்​டெடுக்​கப்​பட்ட ஒரு குறிப்​பில் டொனால்டு ட்ரம்​பின் பெயரும் இடம்​பெற்​றுள்​ளது. இருப்​பினும், அந்த குறிப்பு யாருடையது என்​பது தெளி​வாகத் தெரிய​வில்​லை. hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article