Quebec மாகாணத்தின் முக்கிய Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தொழில்துறை அமைச்சர் Melanie Joly, அம்மாநில Liberal கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், கனடாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான சாத்தியமான பொது வாக்கெடுப்பிற்கு (Referendum) எதிராகச் செயற்படுவதற்காக அடுத்த ஆண்டு தனது நேரத்தையும் ஆற்றலையும் பெருமளவில் செலவிடப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், 2018 முதல் 2024 வரை Joly உடன் இணைந்து மத்திய அமைச்சராகப் பணியாற்றிய Pablo Rodriquez, இந்த வாரம் Quebec Liberal கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அவரது தலைமைத்துவத் தேர்தல் பிரச்சாரத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நடந்து வரும் குற்றவியல் விசாரணை மற்றும் நம்பிக்கை மீறல் சர்ச்சைகளில் அவர் சிக்கியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நான் இந்த மாகாணத் தலைமை பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி எனக்குப் பல அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்தன, நிறைய பேர் என்னை ஊக்குவித்தார்கள். ஆனால், எனது தற்போதைய பணி தொழில்துறை அமைச்சராக இருப்பதுதான். எனவே, நான் ‘இல்லை’ என்று கூறிவிட்டேன், என்று Joly தெரிவித்தார்.
சாத்தியமான பொதுவாக்கெடுப்பு குறித்து தான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், பல ஆண்டுகளாக Quebec இறையாண்மை விவகாரத்தில் முன்னின்று செயல்பட்டு வருவதாகவும் Joly கூறினார். அத்துடன், Quebec சுதந்திரமடைவதால் Quebec மக்களுக்குப் பயனளிக்காது என்றும், மாறாக அது ஒட்டுமொத்த கனேடியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Quebec மக்கள் அடுத்த October மாதம் மாகாண பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கருத்துக்கணிப்புகளின்படி, பிரிவினைவாதக் கட்சியான Parti Québécois (PQ) பெரும்பான்மை அரசாங்கத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் Quebec இறையாண்மை குறித்து இந்தப் PQ கட்சி இரண்டு முறை பொதுவாக்கெடுப்புகளை நடத்தியது, ஆனால் அந்த இரண்டு வாக்கெடுப்புகளிலுமே அக்கட்சி தோல்வியடைந்ததமை குறிப்பிடத்தக்கது.

