7.4 C
Scarborough

“அமெரிக்​கா​வின் வலிமையை மீட்டுள்​ளேன்” – 8 போர்​களை நிறுத்தி உள்​ளதாக ட்ரம்ப் பெருமிதம்

Must read

அமெரிக்​கா​வின் வலிமையை மீட்​டுள்​ளேன் என்​றும் 8 போர்​களை நிறுத்தி உள்​ளேன் என்​றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலை​யில், நாட்டு மக்​களுக்கு அமெரிக்க அதிப​ர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் ஆற்றிய உரை​யில் கூறியதாவது: பதினொரு மாதங்​களுக்கு முன்பு நான் அதிப​ராக பொறுப்​பேற்​ற​போது நாட்​டில் கடும் பொருளா​தார நெருக்​கடி இருந்​தது. விலை​வாசி உச்​சத்​தில் இருந்​தது. மொத்​தத்​தில் குழப்​ப​மான நிலை இருந்​தது. அதை சரிசெய்து வரு​கிறேன். அமெரிக்​கா​வின் வலிமையை மீட்​டிருக்​கிறேன். 10 மாதங்​களில் 8 போர்​களை நிறுத்தி உள்​ளேன்.

ஈரான் அணு ஆயுத அச்​சுறுத்​தலை அழித்​துள்​ளேன். காசா போரை முடிவுக்​குக் கொண்​டு​வந்​துள்​ளேன். அத்​துடன் ஹமாஸ் அமைப்​பினரிடம் பிணைக் கைதியாக இருந்த மற்​றும் உயி​ரிழந்த இஸ்ரேலியர்​களின் உடலை மீட்க நடவடிக்கை எடுத்​தேன். உலகெங்கிலும் இருந்து நம் நாட்​டுக்​குள் பலர் சட்​ட​விரோத​மாக ஊடுரு​வினர். குறிப்​பாக பைடன் ஆட்​சி​யின்​போது ஏராளமானோர் ஊடுரு​வினர்.

அமெரிக்​கர்​களின் வரிப்​பணத்​தில் அவர்களுக்கு மருத்​து​வம், கல்வி உள்​ளிட்ட ஏராள​மான சலுகைகள் வழங்​கப்​பட்​டன. இந்நிலை​யில், சட்​ட​விரோத​மாக ஊடுரு​விய அவர்​களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்பி வரு​கிறேன்.

மேலும் வெளிநாட்​டினரின் வரு​கை​யால் அமெரிக்​கர்​களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்​பதில் சிக்​கல் இருந்​தது. அத்​துடன் விலை​வாசி கடுமை​யாக உயர்ந்​தது. இதைக் கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுத்து வரு​கிறேன். ராணுவத்தில் பணிபுரியும் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக தலா 1,776 டாலர் வழங்கப்படும். இவ்​வாறு அவர் தெரி​வி்த​தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article