2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் தேசிய அணியின் தலைவராக தசூன் ஷானக்க செயற்படுவார் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தேர்வாளர் பிரமோத்ய விக்ரமசிங்க நேற்று (18) உறுதிபடுத்தினார்.
உலகக் கிண்ண அணியின் ஆயத்தங்களின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் இருதரப்புத் கிரிக்கெட் தொடரிலும் ஷானக்க தலைவராக இலங்கை அணியை வழிநடத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கான 25 பேர் கொண்ட முதற்கட்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதி அணி போட்டிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்றும் பிரமோத்ய விக்ரமசிங்க கூறினார்.
2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

