ஒட்டாவா சுகாதார அதிகாரிகள், “இன்ஃப்ளூயன்சா ஏ” பரவல் தொடர்பான கடுமையான பொதுச் சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்டாரியோ சுகாதாரப் பிரிவுகளில் (EOHU) இன்ஃப்ளூயன்சா ஏ (Influenza A) எனப்படும் காய்ச்சலினால் மூன்று குழந்தைகள் டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் உயிரிழந்தன.
உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் ஐந்து முதல் ஒன்பது வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்தே, இந்த ” பொதுச் சுகாதார எச்சரிக்கை” வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு ஒன்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை (CHEO) வழக்கத்தைவிட அதிகமாகக் காய்ச்சல் சம்பவங்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

