மொன்றியலின் தென்கரைப் பகுதியில் உள்ள கானா வாகே (Kahnawake) மற்றும் ஷாட்டோகுவே (Châteauguay) நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு மிரட்டலைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் பரவிய இந்த ‘துப்பாக்கிச் சூடு’ மிரட்டலால் பல பள்ளிகளில் அவசரகால பாதுகாப்பு நடைமுறை அமுல்படுத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்போவதாக வந்த மிரட்டல் செய்தியைத் தொடர்ந்து, மொன்றியல் காவல்துறை (SPVM) மற்றும் கானா வாகே அமைதிப்படை இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தன.
தேடுதல் நடவடிக்கையிலேயே அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து, பள்ளிகளில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால பாதுகாப்பு நடைமுறை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

