மலையாள நடிகர் அகில் விஸ்வநாதன் (வயது 30) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் வெளியான ‘சோழா’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்பட சில படங்களில் நடித்திருந்தவர், அகில் விஸ்வநாதன். இதில் ‘சோழா’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக கேரள மாநில அரசின் விருதை கடந்த 2019-ம் ஆண்டு பெற்றார்.
திருச்சூரில் உள்ள மத்தத்தூரில் வசித்து வந்த அகில் விஸ்வநாதன், நேற்று காலை வீட்டில் சடலமாக கிடந்தார். அவருடைய தாயார் கீதா வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்டபோது, அகில் உயிரற்றுக் கிடந்ததைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த அகிலின் தந்தை விஸ்வநாதன், பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
hindutamil

