அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி கலிஃபோர்னியா, நியூயார்க் உள்பட 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்கள், திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்களை எச்1பி விசா மூலம் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தி வந்தன. இந்த விசாவுக்கான கட்டணம் ரூ. 1,80,000 (2,000 அமெரிக்க டாலர்) முதல் ரூ. 4,52,000 (5,000 அமெரிக்க டாலர்) வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரூ.9 கோடியில் (10 லட்சம் அமெரிக்க டாலர்) அமெரிக்க குடியுரிமை பெறும் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் கடந்த புதன் கிழமை தொடங்கிவைத்தார்.

