கனடா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மைக்கேல் மா (Michael Ma) கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து விலகி, ஆளும் லிபரல் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
டொராண்டோ பகுதியிலுள்ள மார்கம்-யூனியன்வில்லே (Markham-Unionville) தொகுதியின் பிரதிநிதியான மைக்கேல் மா, தனது வாக்காளர்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
மைக்கேல் மா-வின் இந்த விலகல் எதிர்க்கட்சி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) லிபரல் கட்சி அரசாங்கம் ஆனது, பெரும்பான்மை நிலையை அடைவதற்கு இன்னும் ஓர் ஆசனமே தேவையாக உள்ளது.

