1.4 C
Scarborough

கனடாவில் புதிய குழாய் அமைக்கும் திட்டம் குறித்த கருத்துக்கணிப்பு.

Must read

புதிய bitumen குழாய் அமைக்கும் திட்டத்திற்கு, அரைவாசிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், ஐந்தில் ஒரு பகுதியினருக்கும் குறைவானவர்களே முற்றிலும் எதிர்க்கிறார்கள் என்றும் ஒரு புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

​online இல் நடத்தப்பட்ட Leger கருத்துக் கணிப்பிற்கு அமைவாக, குறிப்பாக Alberta வில் வசிப்பவர்கள், ஆண்கள், வயதான கனேடியர்கள் மற்றும் Conservative கட்சி வாக்காளர்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு அதிக ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

வட அமெரிக்காவிற்கு வெளியே உள்ள எரிசக்தி சந்தைகளுக்கான கனடாவின் சந்தைப்படுத்தலை விரிவுபடுத்துவதே Pipeline அமைக்கும் திட்டத்தின் நோக்கமாகும். இதனடிப்படையில், கடந்த மாதம், பிரதமர் Mark Carney, Pipeline திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக Alberta அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

​Leger கருத்துக் கணிப்பானது, Dec. 5 முதல் Dec. 7 வரை 1,548 கனடா நாட்டவர்களிடம், Alberta விலிருந்து British Columbia கடற்கரைக்கு தனியார் நிதியுதவியுடன் bitumen குழாய் அமைக்கும் யோசனையை அவர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்று வினாவியது.

​திட்டத்திற்கு ஆதரவாக பதிலளித்த 50 சதவீதமானவர்களில், 24 சதவீதம் பேர் தாங்கள் உறுதியாக ஆதரிப்பதாகக் கூறினர், அதேசமயம் 26 சதவீதம் பேர் ஓரளவிற்கு ஆதரிப்பதாகக் கூறினர்.

​பதிலளித்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர், தாங்கள் திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், 17 சதவீதம் பேர் தாங்கள் எதிர்ப்பதாகக் கூறியுள்ளனர், 13 சதவீதம் பேர் தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.

Alberta வில் பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், Ontario மற்றும் British Columbia வில் அரைவாசிப் பேரும் புதிய Pipeline அமைக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றனர். ஆனாலும் Quebec இன் ஆதரவு மிகக் குறைவாக 37 சதவீதமாக உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article