ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி 1 ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

